பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2018

காதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்


கம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிவேரிய பொலிஸ் பிரிவில் வசிக்கும் 18 வயதான யுவதி கடத்திச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்ட நிலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த தங்க நகைகளையும் குறித்த நபர் கொள்ளையடித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தை சேர்ந்த நுவன் சஞ்சய ருதிகம என்ற 38 வயதான நபரே யுவதியை கடத்தி, துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனை அவதானித்த பிரதேச மக்கள் இணைந்து குறித்த நபரைக் கடுமையாக தாக்கியமையினால் அவர் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கம்பஹா வைத்தியசாலைக்கு சென்று சந்தேக நபரை நீதவான் பார்வையிட்டார். அவரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் ஹேரத் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட யுவதி மற்றும் சந்தேக நபருக்கு இடையில் காதல் தொடர்பு ஒன்று காணப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபரின் செயற்பாடு குறித்து சந்தேகமடைந்து அவரை நிராகரிக்க ஆரம்பித்துள்ளதாக பாதிக்கப்பட்ட யுவதி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணின் கையடக்க தொலைபேசி சந்தேக நபரிடம் இருந்துள்ளது. இதனை வழங்குவதாக கூறி யுவதியை அழைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார் என பாதிக்கப்பட்ட யுவதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.