பக்கங்கள்

பக்கங்கள்

19 ஆக., 2018

கொழும்பில் பெரும் கூட்டத்தை திரட்டி அரசாங்கத்தை முடக்க கூட்டு எதிரணி திட்டம்


எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் பெருமளவு மக்களை ஒன்று திரட்டி, அரசாங்கத்தை செயற்பட விடாமல் முடக்கும் இரகசியத் திட்டம் ஒன்றை கூட்டு எதிரணி தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணி செப்டம்பர் 5 ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிட்டள்ள கூட்டம் எங்கு நடைபெறும் என்பது முன்னதாக அறிவிக்கப்பட மாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் பெருமளவு மக்களை ஒன்று திரட்டி, அரசாங்கத்தை செயற்பட விடாமல் முடக்கும் இரகசியத் திட்டம் ஒன்றை கூட்டு எதிரணி தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணி செப்டம்பர் 5 ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிட்டள்ள கூட்டம் எங்கு நடைபெறும் என்பது முன்னதாக அறிவிக்கப்பட மாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கூட்டு எதிர்க் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னதாக அறிவித்தால், அரசாங்கம் பொலிஸாரை வைத்து கூட்டம் நடத்துவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றுக் கொள்ளும் எனவும் இதனால், முன்னதாக நடைபெறும் இடத்தை சொல்லாமல் இருப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.