பக்கங்கள்

பக்கங்கள்

25 ஆக., 2018

காங்கேசன்துறையில் கடற்படைச் சிப்பாயைக் காணவில்லை! - மோட்டார் சைக்கிள் அனாதரவான நிலையில் மீட்பு

காங்­கே­சன்­துறை கடற்­படை முகா­மில் பணி­யாற்­றிய, கந்­த­ளா­யைச் சேர்ந்த பியந்த (வயது–25) என்ற கடற்படைச் சிப்­பா­யைக் காண­வில்லை என்று காங்­கே­சன்­துறை பொலி­ஸில் கடற்­ப­டை­யி­னர் முறைப்­பாடு செய்­துள்­ள­னர். காங்­கே­சன்­துறை கடற்­படை முகா­மில் மூன்று நாள்­க­ளுக்கு முன்­னர் பியந்த கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­றுள்­ளார். நேற்­றுக் காலை 10 மணி­ய­ள­வில் கடற்­ப­டை­யி­ன­ரின் மோட்டார் சைக்கிளில் புறப்­பட்­டுச் சென்­றுள்­ளார். ஆயு­தங்­கள் எத­னை­யும் இதன்­போது எடுத்­துச் செல்­ல­வில்லை.

நீண்­ட­நே­ர­மா­கி­யும் அவ­ரைக் காண­வில்லை என்­ப­தால் கடற்­ப­டை­யி­னர் தேடு­தல் நடத்­தி­யுள்­ள­னர். அவர் எடுத்­துச் சென்ற மோட்டார் சைக்கிள் தையிட்­டிப் பகு­தி­யில் வீதி ஓர­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் மீட்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸில் கடற்­ப­டை­யி­னர் முறைப்­பாடு பதிவு செய்­துள்­ள­னர். மீட்­கப்­பட்ட மோட்டார் சைக்கிள்ம் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.