பக்கங்கள்

பக்கங்கள்

16 ஆக., 2018

பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம்


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில், பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம் என தேச பற்றுள்ள தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த, தேச பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அங்கத்தவர் துஷாந்தி அப்புகொட இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேரணை குறித்து கடந்த அமர்வின் போது வெளிவிவகார அமைச்சு உரிய கவத்தை செலுத்தவில்லை.

இலங்கை தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுகளை புலம்பெயர் தரப்பினர் முன்வைக்கும் போது அது தொடர்பில் எதிர்ப்பை வெளியிடாது வாய்மூடி மௌனிகளாக இருந்தனர். அதன் மூலம் இலங்கையில் உயர்ஸ்தானிகர் சேவை எந்தளவுக்கு பின்னடைந்துள்ளது என்பதை அறிய முடியும்.

எனவே இம்முறை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் பல உண்மைகளை வெளிகொணர எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறான கருத்துக்களை முன்வைத்து பிரேரணையை வலுவிழக்க செய்யவுள்ளோம். குற்றச்சாட்டுகளை முன்வைக்க 90 வீதமான தகவல்கள் கிடைத்துள்ளன. தேச பற்றுள்ள தேசிய இயக்கம் எப்போதும் இராணுவ வீரர்களுக்காகவும், தேசத்திற்காகவும் குரல் கொடுக்கும்” எனத் தெரிவித்தார்.