பக்கங்கள்

பக்கங்கள்

13 ஆக., 2018

பாரிசில் ஈழத் தமிழர் வீட்டில் பெரும் கொள்ளை!

பிரான்ஸ் - பாரிஸ் நகரில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவரின் வீட்டில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் கடந்த எட்டாம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தின் போது வீட்டிலிருந்த பெருந்தொகையான பணம் மற்றும் முக்கிய அரச ஆவணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவை சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.