பக்கங்கள்

பக்கங்கள்

20 ஆக., 2018

வெடுக்குநாறி மலை மீட்புப் போராட்டத்துக்கு அழைப்பு!

வவுனியா வடக்கு,நெடுங்கேண- ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தை மீட்டெடுக்கும் போராட்டம், வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்னால், நாளை மறுதினம் நடத்தப்படவுள்ளதாக ஆலய நிர்வாக சபையின் செயலாளர் து. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். இது தொடர்பாக, அவர், வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"5 தலைமுறைகள் கடந்தும், பல்லாண்டு காலமாக வழிபாடு செய்து வரும் இவ்வாலயத்தை, தொல்​லியலுக்குரிய இடமாக ஆக்கிரமித்துக்கொள்ள, இலங்கை தொல்லியல் திணைக்களம் இன்று முனைப்புக்காட்டி வருகிறது.

தமிழர்களின் மரபு சார்ந்த பல இடங்களையும், தொல்லியல் திணைக்களம் தமது ஆளுகைக்குள் உட்படுத்தி, அவற்றைப் பாதுகாப்பதாகத் தெரிவித்து, பௌத்த வழிபாட்டு இடங்களாக மாற்றியுள்ளது. கன்னியா வெந்நீரூற்றும் கதிர்காமமும், அதற்கான உதாரணங்கள்.

இவ்வாறான நிலை, வெடுக்குநாறி மலைக்கு ஏற்படக்கூடாது. அதை வலியுறுத்தும் முகமாக, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக, நாளை மறுதினம் (21) காலை 9 மணிக்கு நடைபெறும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய மீட்புப் போராட்டத்தில், அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் கோரியுள்ளார்.

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் அமைந்துள்ள மலை, தொல்பொருளியல் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்டதென, தொல்பொருள் தி