பக்கங்கள்

பக்கங்கள்

6 ஆக., 2018

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை வைத்திருப்பது, வெளியிடுவது குற்றம்! - பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை

நேற்று நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை தம்வசம் வைத்திருத்தல், அச்சிடல், விற்பனை செய்தல், இணையம் உள்ளிட்டு பகிரங்கமாக வெளியிடல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை நிறைவடைந்த போதும், அவை அடங்கிய பரீட்சை வினாத்தாள், இரகசியமான ஆவணமாக தொடர்ந்தும் கருதப்படும் என, பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவரேனுமொருவர் அல்லது நிறுவனத்தினால் அவ்விதிகள் மீறப்படுமாயின், அது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கோ (119, 011 2 42 1111), பரீட்சைகள் திணைக்களத்திற்கோ (1911) அறிவிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

497 தொடர்பாடல் மத்திய நிலையங்கள் ஊடாக 3,050 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு, நாடு முழுவதிலுமுள்ள சிங்கள மொழி மூலம் 267,770 பேரும் தமிழ் மொழி மூலம் 87,556 பேரும் உள்ளிட்ட, 355,326 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.