பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2018

யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள்!- தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைப்பு


யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்களை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைத்துள்ளது. புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு, யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.


தமிழகத்தின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் பங்குபற்றுதலுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள் கையளிக்கப்பட்டதுடன், வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் வாசிகசாலைகளுக்கு புத்தகங்களை பெற்றுக்கொள்வதற்காக கல்வியமைச்சினால் நிதி வழங்கப்பட்டும் உள்ளது.