பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2018

சென்னை சைதாபேட்டையில் தொழிலதிபர் வீட்டில் 60 சிலைகள் பறிமுதல்

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோத்னையில் சென்னை தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 60 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் சைதாபேட்டையில்  தொழிலதிபர் வீட்டில் நடந்த சோதனையில் 60 சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிலை கடத்தல் வழக்கில் தீனதயாளன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரிடம் சிலைகளை விற்றதாக  கூறியிருந்தார். இது தொடர்பாக அவரது வீட்டில் ஏற்கனவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் ரன்வீர் ஷா வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 60 சிலைகளை பறிமுதல் செய்தனர். பழமையான கோயில்களின் தூண்கள் மற்றும் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவைகள் 100 வருடத்திற்கும் மேல் பழமையானவை ஆகும். கைபற்றபட்ட சிலைகள் பல்வேறு கோவில்களுக்கு சொந்தமானவையாகும்.