பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2018

மாங்குளத்தில் லொறி மீது மோதிய வான்! - யாழ். வாசிகள் 9 பேர் படுகாயம்

யாழ்ப்பாணம் - கண்டி வீதியில், மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் வான் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கி பயணித்து கொண்டிருந்தவர்களின் வான், லொறி ஒன்றின் பின்னால் சென்று மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வான் சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.