பக்கங்கள்

பக்கங்கள்

28 செப்., 2018

அரசாங்கம் கவிழும் - தமிழ் கூட்டமைப்பினர் எங்களுடன் கலந்துரையாடுகின்றனர்


வரவு செலவு திட்டத்தின் போது அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமென்ற நம்பிக்கையிருப்பதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் அணியினர் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அனைவரும் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் இது சாத்தியமாகும் என்பதுடன் அதன் போது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிலரினதும் மற்றும் அரசாங்கத்திலுள்ள சிறுபான்மை கட்சிகளினதும் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலர் தங்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

16 பேர் அணியினரால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவே இதனை தெரிவித்துள்ளார்.