பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2018

கொழும்பில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடக்கு முதல்வருக்கு இடையில் சந்திப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சீ.வி.விக்னேஸ்வரன் அவதானம் செலுத்தி வருவதாக அண்மைக்காலமாக தகவல் வெளியாகி வருகிறது.

எனினும், அவ்வாறான நடவடிக்கையில் தற்போது வரை ஈடுபடவில்லை என முதலமைச்சர் தெரிவித்து வருகின்றார்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தோல்வி கண்டுவிட்டதாக தமிழ் மக்கள் பேரவையின் அலுவலக அங்குரார்ப்பண நிகழ்வில் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தலைமைத்துவம் ஏற்பது குறித்து ஆராய்ந்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறிருப்பினும், இந்த விடயங்களுக்கு உரிய நேரத்தில் தீர்மானம் மேற்கொள்வதாக இரா.சம்பந்தன் தெரிவித்து வருகின்றார்.

இந்த நிலையில், இன்றைய தினம் இருவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு அனைவர் மத்தியிலும், பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.