பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2018

விசேட நீதிமன்றங்கள் அனைத்தும் அரசியல் பழிவாங்களுக்காகவே ஸ்தாபிக்கப்பட்டவை


விசேட நீதிமன்றங்கள் அனைத்தும் அரசியல் பழிவாங்களுக்காகவே ஸ்தாபிக்கப்பட்டவை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த கால ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) கோட்டாய உள்ளிட்ட ஏழு பேரும் ஆஜராகியிருந்தார்.

அதேநேரம், இந்த வழக்கு விசாரணையின்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன், முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிரணியின் உறுப்பினர்களும் வருகைத் தந்திருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரபாகரனின் உருவச்சிலையை வைத்திருந்தால் ஜெனிவாவில் இருந்து அங்கீகாரமே இன்று கிடைத்திருக்கும்.

முழு உலகமே ஏற்றுக்கொண்ட பயங்கரவாதியான பிரபாகரனுக்கு மலர் வைத்து, அஞ்சலி செலுத்துவதை இந்த நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.

ஆனால், பண்டாரநாயக்கவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபிக்க உதவியவருக்கு சிலை வைக்கும்போது அதனை எதிர்க்கிறார்கள்.

இதனை அரசாங்கத்தில் இருக்கும் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் கூட எதிர்ப்பதுதான் எமக்கு கவலையளிக்கிறது.

இவ்வாறான பொய்யான வழக்குகளைப்போட்டு, எம்மை அரசியல் ரீதியாக அச்சுறுத்தினால் மக்களுக்கான பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. விசேட நீதிமன்றங்கள் எல்லாம் அரசியல் பழிவாங்களுக்காகத்தான் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களத்தையும், நீதிமன்றங்களையும் தமது அரசியல் குரோதத்தை தணித்துக்கொள்வதற்காகவே அரசாங்கம் இன்று பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் எல்லாம் எமக்கு சந்தேகத்தையே எழுப்புகிறது. எனவே, அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்“ என தெரிவித்துள்ளார்