பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2018

படையினர் தனிப்பட்ட தேவைகளுக்கு கடத்தல், கொலைகளை செய்யவில்லையாம்


சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், சித்திரவதைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் உட்பட படையினர்கைதுசெய்யப்பட்டு வருவதற்கு மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் சமூகவலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.



ஸ்ரீலங்கா இராணுவத்தினர் எந்தவொரு கொலையையும், தாக்குதலையும்தமது தனிப்பட்ட தேவைக்காக மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் படையினரைக்கொண்டு தமது தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் வாதிகளேதண்டிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.