பக்கங்கள்

பக்கங்கள்

11 செப்., 2018

சர்ச்சைகளின் மத்தியில் பொங்கல் கண்டார் செம்மலைப் பிள்ளையார்!


முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட நீராவியடி ஏற்றம் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் ஆலய வளாகம் யுத்தம் முடிவடைந்து மக்கள் மீள்குடியேறிய போது பௌத்த பிக்கு ஒருவரால் அந்த இடத்தில் விகாரையொன்று அமைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டிருந்தது


அந்த இடத்தினை மீட்ப்பதற்காக மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்த போதும் குறித்த பகுதி தொல் பொருள் திணைக்களத்தால் தமது பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழர்களின் முழுமுதல் கடவுளான பிள்ளையார் ஆலயமும் அந்த பகுதியில் அமைந்துள்ளமையினால் இந்து சமய வழிபாடுகளையும் பாரம்பரியங்களையும் பேணிப்பாதுகாக்கும் நோக்கில் பிரதேச மக்களால் பொங்கல் பொங்கி தொன்று தொட்டுவந்த மரபு வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பிரதேச மக்கள் பிள்ளையாருக்கு பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்து சமய வழிபாடுகளையும் பாரம்பரியங்களையும் பேணிப்பாதுகாக்கும் நோக்கில் பிரதேச மக்கள் பொங்கல் பொங்கி வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்கள். இதற்கமைய நேற்று திங்கட் கிழமை பிரதேச மக்கள் பிள்ளையாருக்கு பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்