யாழ்.குடாநாட்டில் நான்கு கட்டடத் தொகுதிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்!
மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை- கூழாவடி இராணுவ முகாம் உள்ளிட்ட சில பிரதேசங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை இராணுவப் பிடியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் இதனைத் தெரிவித்துள்ளார்.

“குடாநாட்டில் பொதுமக்களின் பாவனைக்குரிய சில இடங்களை விடுவிக்குமாறு கோரியிருந்தோம். அவ்வாறு கோரிக்கை விடப்பட்ட இடங்களில் நான்கு இடங்களை விடுவிக்க படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில், மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம், வசாவிளான், குரும்பசிட்டிப் பகுதியிலுள்ள ஓர் கூட்டுறவுச் சங்க கிளைக் கட்டடத்துடன் ஓர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடமும் விடுவிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவித்தல் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியால் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கட்டடங்கள் எம்மிடம் கையளிக்கப்பட்டதும் உடனடியாகவே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்” எனக் கூறினார்