பக்கங்கள்

பக்கங்கள்

26 செப்., 2018

நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக கூறியவர்களுக்கு ஜனாதிபதி சிறந்த பதில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக பல்வேறு தரப்பினரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு
ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் சிறந்த பதில் வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார். 

நல்லிணக்கத்தை நோக்கி செல்லும் பயணத்திற்கு தடையாக விரல் நீட்ட வேண்டாம் என்று ஜனாதிபதி அங்கு கூறியதாக அவர் கூறினார். 

இலங்கை பெருமையடையும் வகையில் ஜனாதிபதி நேற்று அங்கு உரையாற்றியதாக அவர் கூறினார். 

அதேநேரம் அமெரிக்கவினால் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி இலங்கை வழங்கப்படும் என்று ஜனாதிபதியிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு டிசம்பர் மாதமளவில் அமெரிக்க அதிகாரிகள் இலங்கை வருவதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.