பக்கங்கள்

பக்கங்கள்

15 செப்., 2018

சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் என்கிறது கூட்டமைப்பு

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் உள்ளக நகர்வுகள் மிகவும் மோசமானதாக உள்ளன. தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் சர்வதேச மேற்பார்வை இருப்பது அவசியம். உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகள் மோசமானவையாகும். எனவே சர்வதேச நீதிமன்ற தலையீடுகள் அவசியம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.



ஜனாதிபதி ஜெனிவா செல்ல முன்னர் நாம் மனித உரிமை ஆணையாளரிடம் இலங்கையின் உண்மை தன்மையை தெரிவிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முப்படைகளின் அலுவலக பிரதானி ரவீந்திர விஜய குணரத்ன குறித்து அதிகமாக விமர்சனங்கள் மற்றும் அரச தரப்பின் பாதுகாப்பில் அவர் பாதுகாக்கப்படுகின்றார் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்தும், ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொறுப்புக்கூறல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.