பக்கங்கள்

பக்கங்கள்

28 செப்., 2018

தமிழ் மக்களை ஏமாற்றிய கடைசி சிங்கள தலைவர் மைத்திரி


தமிழ் மக்களை ஏமாற்றிய கடைசி சிங்கள தலைவராக மைத்திரிபால சிறிசேன இருப்பார் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற டெலோ இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் தலையீடு இன்றி தங்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாதென்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை உரையில் நிரூபித்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால் அவரின் உரைக்கு தமிழ் மக்களின் சார்பில் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பிலோ அல்லது அதற்கான தீர்வை பெற்றுகொடுப்பது தொடர்பிலோ எந்ததொரு கருத்தையும் முன்வைக்காமல் பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தனது ஆதரவை உலகத் தலைவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.