பக்கங்கள்

பக்கங்கள்

20 அக்., 2018

முதல்வர் பற்றி அவதூறு பேச்சு-திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்கு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தி.நகர் டாக்டர் சதாசிவம் சாலையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் அவதூறாக பேசினார்.
மேலும் தமிழக அரசு பற்றியும் விமர்சனம் செய்தார்.இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மேகலை பாண்டிபஜார் சட்டம்-ஒழுங்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.