பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2018

போர்க்குற்றவாளி மகிந்தராஜபச்ஷ பிரதமராக பதவி ஏற்பு
சிறீலங்காவின் முன்னாள் அதிபரான போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக சிறீலங்கா நேரப்படி 8.30 மணிக்கு பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ள.

இன்று வெள்ளிக்கிழமை சிறீலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இப்பதவி ஏற்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த பத்து வருடங்களாக சிறீலங்காவின் அதிபராக இருந்த ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்து சர்வதேச போர்க்குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமரவுள்ளமை தமிழர்களுக்கு மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.