பக்கங்கள்

பக்கங்கள்

8 அக்., 2018

மொரட்டுவையில் 926 வீடுகள் வௌ்ளத்தில் மூழ்கின

மொரட்டுவ பிரதேசத்தில் 926 வீடுகள் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பிரதேச
செயலாளர் நிமாலி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ, தெலவல, பொருபன, மோல்பே, கட்டுபெத்த, கொரலவெல்ல வடக்கு மற்றும் மேல், வில்லோரவத்த கிழக்கு மற்றும் மேற்கு, மொரட்டுவெல்ல ​ஆகிய  12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள வீடுகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதெனவும், வலிப்பு நோய் வந்த ஒருவர் நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளாரெனவும் மொரட்டுவ பிரதேச செயலாளர் நிமாலி கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.