பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2018

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம் லஞ்ச ஒழிப்புதுறை

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் வேலுமணி மீது பல கோடி ரூபாய் முறைகேடு புகாரை, லஞ்ச ஒழிப்பு துறையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்திருந்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்காததால், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்தப் பணிகளை தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியதாகவும், 942 கோடி ரூபாய் உபரி வருவாயை கொண்டிருந்த சென்னை மாநகராட்சியை, 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் நிலைக்கு தள்ளியதாகவும் கூறி இருந்தார்.

மனுவுக்கு ஆதரவாக 3000 பக்க ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அமைச்சர் மீதான புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறி, கடித நகலை தாக்கல் செய்தார்.

மேலும், சட்டப்படி கடிதத்தின் மீது முடிவெடுக்க தலைமை செயலாளருக்கு மூன்று மாத அவகாசம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தரப்பு வழக்கறிஞர் இளங்கோ, ஊழல் தடுப்பு சட்ட புதிய திருத்தப்படி, அரசு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம் லஞ்ச ஒழிப்புதுறை
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம் லஞ்ச ஒழிப்புதுறை
Facebook Twitter Google+ Mail Text Size Print
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
பதிவு: அக்டோபர் 03, 2018 12:46 PM
சென்னை

அமைச்சர் வேலுமணி மீது பல கோடி ரூபாய் முறைகேடு புகாரை, லஞ்ச ஒழிப்பு துறையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்திருந்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்காததால், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்தப் பணிகளை தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியதாகவும், 942 கோடி ரூபாய் உபரி வருவாயை கொண்டிருந்த சென்னை மாநகராட்சியை, 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் நிலைக்கு தள்ளியதாகவும் கூறி இருந்தார்.

மனுவுக்கு ஆதரவாக 3000 பக்க ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அமைச்சர் மீதான புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறி, கடித நகலை தாக்கல் செய்தார்.

மேலும், சட்டப்படி கடிதத்தின் மீது முடிவெடுக்க தலைமை செயலாளருக்கு மூன்று மாத அவகாசம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தரப்பு வழக்கறிஞர் இளங்கோ, ஊழல் தடுப்பு சட்ட புதிய திருத்தப்படி, அரசு ஊழியர்கள் மீதான புகார் மீது விசாரணை நடத்த ஆளுநரிடம் தான் அனுமதி பெற வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த வாதத்துக்காக, விசாரணையை நீதிபதி, வரும் 23ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
ஊழியர்கள் மீதான புகார் மீது விசாரணை நடத்த ஆளுநரிடம் தான் அனுமதி பெற வேண்டும் என வாதிட்டார்.