பக்கங்கள்

பக்கங்கள்

15 அக்., 2018

இருந்தது போதும்; புறப்படப் போகிறேன்’-பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்த

இருந்தது போதும்; புறப்படப் போகிறேன்’
தான் இந்தப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து விலக​ வேண்டுமென்பது தான் அனைவரதும் விருப்பமென்றால், அந்தப் பதவியை இராஜினாமா செய்யத் தயாரென, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


இந்தப் பதவியை இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னிடம் அறிவிக்கவில்லை என்றபோதிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எச்சரிக்கையைத் தன்னால் உணர்ந்துகொள்ள முடிவதாகவும், பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

“இனி இருந்தது போதுமென்று நினைக்கிறேன். 33 வருடங்களாக, பொலிஸ் சேவையை நியாயமாகச் செய்துள்ளேன். எவரிடமும், ஒரு கல் துண்டையேனும் பெற்றுக்கொள்ளவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.