பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2018

நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு!

நிபுணன் திரைப்படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றம்சாட்டியுள்ளார்.



#MeToo எனும் பக்கத்தின் ஊடாக தற்போது பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதில் திரையுலகம் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றச்சாட்டை தற்போது முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ருதி ஹரிஹரன் அவரது டுவிட்டர் பக்கத்தில், கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற நிபுணன் திரைப்பட படப்பிடிப்பின்போது என்னிடம் அர்ஜுன் மிகவும் மோசமாக நடந்து கொண்டார் என்றும், அந்தப் திரைப்படத்தில் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்திருந்தேன். அப்போது அவர் பல்வேறு தொல்லைகளைத் தந்திருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று நடிகர் அர்ஜுன் மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது அவர் இது தொடர்பாக வழக்கொன்றையும் பதிவுசெய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.