பக்கங்கள்

பக்கங்கள்

2 அக்., 2018

அரையிறுதியில் கிளிநொச்சி உருத்திரபுரம்


தமது நூற்றாண்டு விழாவையொட்டி அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் 'வடக்கின் கில்லாடி யார்’ கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றுள்ளது.

அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக் கழகத்துடனான காலிறுதிப் போட்டியின் வழமையான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் காணப்பட்டு பின்னர் பெனால்டியில் 4-3 என்ற ரீதியில் வென்று உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.