பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2018

யாரெல்லாம் தமிழரென கண்டறியும் பொறுப்பை சீமானுக்கு அளித்தது யார்? தமிழிசை ஆவேசம்.!

இவர்தான் தமிழர் எனும் அடையாளம் காட்டும் உரிமையை சீமானுக்கு வழங்கியது யார்? என கேள்வியெழுப்பியுள்ளார்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
உலகம் முழுவதும் #metoo என்ற பரப்புரை இயக்கத்தின் மூலம் பொதுவெளியில், அலுவலகங்களில், இன்னபிற இடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் மற்றும் சீண்டல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகின்றனர்.
அந்த வகையில் தனக்கு பாடலாசிரியர் வைரமுத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக சின்மயி புகார் தெரிவித்துள்ள சூழலில், இன்னும் பல பெண்களும் வைரமுத்துவுக்கு எதிராக தங்களது பாலியல் புகார்களை முன் வைத்து வருகின்றனர்.
வைரமுத்து மீதான பாலியல் புகாரில் உள்நோக்கம் உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ள சூழலில், சீமானை காட்டமாக விமர்சித்துள்ளார் தமிழிசை.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "கவரிமானாக வாழ்பவர்களே தமிழர்களின் அடையாளம் “கவர்ச்சி”மானாக வாழ்பவர்கள் அல்ல. இவர்தான் தமிழர் எனும் அடையாளம் காட்டும் உரிமையை சீமானுக்கு வழங்கியது யார்? ஒடுக்கப்பட்டவருக்காக குரல் கொடுப்பதே தமிழர் அடையாளம்" என தெரிவித்துள்ளார் தமிழிசை.