பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2018

மஹிந்தவுக்கு இ​.தொ.கா ஆதரவு

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கே தங்களது ஆதரவை வழங்கவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகரும் பிரதியமைச்சருமான
முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், இன்றைய காலநிலைக்குத் தக்கவாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் செய்யக் காத்திருக்கிறது என்றும் இந்த அரசாங்கம் வந்ததிலிருந்து ஒரு நிலையான அரசாங்கமாக அமையவில்லை என்றும் கூறியுள்ளார்.
இது எப்போதும் ஆட்டம் கண்ட அரசாங்கமாகவே இருந்தது என்று குறிப்பிட்ட அவர்,  இருந்தாலும் சில விடயங்களுக்கு வாக்களிக்கும்போது, மக்கள் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வாக்களித்தார்கள் என்றும், ஆனால் இன்று நாட்டு நிலைமையைப் பார்க்கும்போது, மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
நாடு, பொருளாதார ரீதியில், மிகவும் மோசமாகவே இருக்கிறது என்றும் விசேடமாக, தோட்டத்தொழிலாளர்கள் மோசமாகப் பாதித்துள்ளனர் என்றும் எனவே, தாங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்வுக்கே ஆதரவு வழங்குவதாகவும் அவர் கூறினார்.