பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2018

யாழ் தீவகம் வேலணையில் இளந்தலைமுறையின் ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் விடிவெள்ளி அமைப்பு!




யாழ் தீவகம் வேலணைப் பிரதேசத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை முன்னெடுத்து
வரும் விடிவெள்ளி அமைப்பு, அங்குள்ள இளைய தலைமுறையின் ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் செயற்பாடுகளில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.
இவ்வாறான பணிகளின் ஒன்றாக அண்மையில் பெறுபேறுகள் வெளிவந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் தேற்றுவதற்கு முன்னோடியாக முன்னணி வளவாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகளை விடிவெள்ளி அமைப்பு நடாத்தியிருந்தது.
Vidivelli2
Vidivelli3
இதனால் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்ததோடு, சிறப்பான பெறுபேறுகளையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளதை அண்மையில் வெளிவந்த பெறுபேறுகள் உறுதி செய்துள்ளன.
Vidivelli3
இது இவ்விதமிருக்க வேலணை மண்ணில் விளையாட்டுத்துறையில் இளைய தலைமுறையின் ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் விதத்தில் கடந்த வாரம் வேலணை மேற்கு அம்பிகை நகர் சிறீமகேஸ்வரி விளையாட்டுக் கழகம் நடாத்திய உதைபந்தாட்டத் தொடருக்கான நிதி அனுசரணையையும் விடிவெள்ளி அமைப்பு வழங்கியிருந்தது.
Vidivelli1