பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2018

யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் பாலியாற்றில் இருந்து வரும்

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை, வடக்கு
மாகாண சபையில் இன்று (04) நிறைவேற்றப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (04)  அவைத் தலைவர் சீ.வீகே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தால் பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை முன்மொழியப்பட்டது.
இந்தப் பிரேரணையை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழிமொழிந்தார்.