பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2018

முதலாவது டெஸ்டில் முன்னிலை இந்தியா

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராஜ்கோட்டில்
இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய முதல்நாளில் அறிமுக வீரர் பிறித்திவி ஷாவின் சதத்தோடு இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில், தமது முதலாவது இனிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்தியா இன்றைய முதலாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 364 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில், பிறித்திவி ஷா 134, செட்டேஸ்வர் புஜாரா 86, விராத் கோலி ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களைப் பெற்றனர்.