பக்கங்கள்

பக்கங்கள்

2 அக்., 2018

திருமுருகன் காந்தி விடுதலை ஆகிறாரா..?


ஐநா சபையில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐநாவில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அது மட்டுமில்லாமல் பல முக்கிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் அவர் வேலூர் சிறை சென்று இன்றோடு 53 நாட்கள் ஆகிவிட்டது. அவர் உடல்நிலை இதனால் மோசமாக நலிவடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். .

இந்த நிலையில் அவர் மீதான அனைத்து வழக்குகளுக்கும் ஜாமீன் கிடைத்துவிட்டது. அவர் இன்று மாலை விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. .

இன்று மாலை நான்கு மணிக்கு அவர் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக வேலூர் சிறை நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.