பக்கங்கள்

பக்கங்கள்

8 அக்., 2018

யுத்தத்தால் உறவினரை இழந்த மக்களுக்கு வீடுகளை அமைக்க வேண்டும்; சயந்தன் கோரிக்கை

யுத்தத்தால் உறவினர்களை இழந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டது.இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கேசவன் சயந்தன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
புள்ளிகள் வழங்கப்பட்டு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் நடைமுறை தொடர்பிலும் கேசவன் சயந்தன் இதன்போது விசனம் வெளியிட்டிருந்தார்