பக்கங்கள்

பக்கங்கள்

13 நவ., 2018

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்தோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சகல மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது.
இந்தநிலையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு தொடர்பில்  கருத்து வெளியிடும் போதே எம்.ஏ சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.