பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2018

ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த ஆர்ப்பாட்ட பேரணி மீது ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் வைத்தே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.