பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2018

சி.வி. விக்னேஸ்வரன் கட்சியிலிருந்து இராஜினாமா

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுவதாக எழுத்து மூல
அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.
சீ.வி. விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சிக் காரியாலயத்தில் வைத்து இக்கடிதத்தை ஒப்படைத்துள்ளதாகவும், இதன்போது மாவை சேனாதிராஜாவுடன் சுமார் ஒரு மணி நேர சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
தான் உருவாக்கியுள்ள எம்.எம்.கே. கட்சியின் ஊடாக எதிர்வரும் காலத்தில் அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் வட மாகாண அரசியல் நடவடிக்கையிலிருந்து தான் ஒரு போதும் நீங்கிக் கொள்ள மாட்டேன் எனவும் இச்சந்திப்பில் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன