பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2018

கட்டுநாயக்கா தாக்குதலுக்கு ரணில் உதவினார் - துரோகி கருணா குற்றச்சாட்டு

கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது 2001ஆம் ஆண்டு ஆடி மாதம் தமிழீழ விடுதலைப்
புலிகள் நிகழ்த்திய தாக்குலுக்கு ரணில் விக்கிரமசிங்க உதவியதாக துரோகி கருணா குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் தான் மேற்கொண்டதில்லை என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கும் நிலையில், இது பற்றி இன்று கீச்சியம் (Twitter) ஊடாக கருத்துப் பகிர்வை ஆங்கிலத்திலும், தமிழிலும் மேற்கொண்டிருக்கும் துரோகி கருணா, கட்டுநாயக்கா தாக்குதலுக்கு ரணில் விக்கிரமசிங்க உதவியது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை, சில முக்கிய இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டுப் புலனாய்வுத்துறைக்குமே தெரிந்த உண்மை என்று குறிப்பிட்டுள்ளார்.