பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2018

இன்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை அறுபத்து நான்கு

இன்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை அறுபத்து நான்குகாலம் ஒரு இனத்துக்கு அடிக்கடி
வரங்களை தருவதில்லை.அது யுகங்களுக்கு யுகமே அந்த ஆச்சரியங்களை நிகழ்த்தும்.அவ்வாறு ஓர் பேராச்சரியம் தமிழீழ நிலத்தில் இந்நாளில் நிகழ்ந்தது.இன்றுதான் பின்நாளில் இந்த பூமிப்பந்தையே ஈழத்தமிழர்கள் பக்கம் பார்க்க வைத்த பிரபாகரன் வல்வெட்டித்துறையில் பிறந்தார்.நீண்ட தொன்மையான வரலாறுகளையும் உலகின் முதல் மொழியாக கருதப்படும் தமிழ் மொழியையும் கொண்டுள்ள தமக்கென ஒரு தனிப்பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை கொண்ட தமிழினம் அடிமைகளாக வாழும் நிலையை தன் இளவயதில் உணர்ந்து ஏன் அடிமைத்தனத்துக்கு எதிராக போராடக்கூடாது என்ற கேள்விகளை தனக்குள் கேட்டு போராளியாக புறப்பட்டவர்தான்.இப்பெரும் புரட்சியாளர்.கொள்கையில் தீவிரமான பற்றும் ஒழுக்கமும் வீரக்குணமும்தான் இன்று அவரை உலகம்போற்றுகின்ற தமிழர்களின் தலைவனாக மாற்றியது.