பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2018

மைத்திரிக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்குமிடையில் தொலைபேசி !

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பொதுநலவாய அமைப்பின்
செயலாளர் நாயகம் பரோனஸ் பெற்றீஸியா ஸ்கொட்லான்ட்டுக்குமிடையில் நேற்று  விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.
இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஏற்பவே தான் செயற்படுவதாகவும் ஜனநாயக நடைமுறைகளை தொடர்ந்தும் பேணிவருவதாகவும் சிறிலங்கா ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப செயற்படுமாறு தான் சபாநாயகரிடம் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக  சிறிலங்கா ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்