பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2018

16 வயது பெண் மீது பாலியல் தாக்குதல் ரொறன்ரோவில் உள்ள தேவாலய போதகர் மீது குற்றச்சாட்


ரொறன்ரோவில் உள்ள தேவாலயம் ஒன்றின் 51 வயதான போதகர் மீது பதின்ம வயது பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், ஒக்டோபர் தொடக்கத்தில் மற்றும் நவம்பர் மாத இறுதியில் பாதிக்கப்பட்ட 16 வயது பெண் மூன்று தனித்தனி சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒன்றாரியோவை சேர்ந்த டேனியல் ஜோர்ஜ் என்ற குறித்த போதகர் மீது பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் சுரண்டல் உட்பட மூன்று குற்றச்சாட்டுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண்ணை விட மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் மேலதிக விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்