பக்கங்கள்

பக்கங்கள்

31 டிச., 2018

கிணற்றிலிருந்து 24 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்பு-வவுனியா

வவுனியா ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் இன்று (31.12.2018) காலை 7.30 மணியளவில் கிணற்றிலிருந்து 24 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.அதிகாலை வேளை தந்தை வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சமயத்தில் வீட்டில் மகனை காணவில்லையென தேடிய போது கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்களுக்கு சம்பவத்தினை தெரியப்படுத்தியதையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சடலமாக மீட்கப்பட்டவர் 24 வயதுடைய ஜெகமோகன் எனவும் மரணத்திற்கான விசாரணைகளை முன்னேடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.