பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2018

தமிழக முகாமிலிருந்து 42 ஈழத் தமிழர்கள் நாடு திரும்பினர்

தமிழக அகதி முகாம்களில் வசித்து வந்த 42 ஈழத்தமிழர்கள் நாடு திரும்பினர்.

19 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே நேற்றைய தினம் (11) நாடு திரும்பியதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.

இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மூன்று விமானங்களில் இவர்கள் தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.

மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தினால் இவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 50 கிலோகிராம் பொருட்களை மேலதிகமாக நாட்டிற்குக் கொண்டுவர சிறப்பு சலுகை வழங்கப்பட்டிருந்ததாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.