பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2018

இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் தீர்மானம்

2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றை சமர்பிப்பதற்கு ஐ.தே.மு தீர்மானித்திருப்பதாக ​நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்குரிய இந்த இடைக்கால கணக்கு அறிக்கையில், எரிபொருள், அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்தக் கணக்கு அறிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.