பக்கங்கள்

பக்கங்கள்

19 டிச., 2018

அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு

அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.எனினும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ள தமக்கு அவசியம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினர் கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



அலரிமாளிகையில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டிருந்தது.

இதில் வைத்து அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சரவை நியமனத்தின் போது 30 பேருக்கு அமைச்சு பதவி வழங்கப்படும். அத்துடன் 40 பேருக்கும் அதிகமானோரை கொண்டிருக்காத வகையில் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் நியமனங்கள் இடம்பெறும்.


இதேவேளை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் யோசனையொன்றை முன்வைத்து பெரும்பான்மையை பெற்றுக் கொண்டு