பக்கங்கள்

பக்கங்கள்

20 டிச., 2018

சம்பந்தன் சபாநாயகருக்கு அவசர கடிதம்

தான் எதிர்க்கட்சித் தலைவராக கடமைகளை நிறைவேற்ற அனுமதிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நேற்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரா.சம்பந்தன், இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இரண்டு பேர் இருக்கின்றனர். என்னை சபாநாயகர் இன்னமும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும், எதிர்க்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகரின் அறிவிப்பு நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்பதுடன், அரசியலமைப்பிற்கு முரணானது. என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே அவர், சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்