பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2018

ரணில் பிரதமர் ? ; நம்பிக்கை பிரேரணை


பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு காணப்படுகின்றமையினால்
, அவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி நாளைமறுதினம் பாராளுமன்றத்தில் நம்பிக்கை பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெலஉறுமய ஆகிய கட்சிகள் இணைந்தே மேற்படி நம்பிக்கைப் பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளன.
எனினும் இப் பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணியினர் ஆதரவு அளிக்க மாட்டோம் என மறுத்துள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது தொடர்பான தீர்க்கமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.