பக்கங்கள்

பக்கங்கள்

27 டிச., 2018

புங்குடுதீவு ஊரதீவு தெருவெங்கும் மின்னொளி
வணக்கம் உறவுகளே
எமது கிராமத்திற்கு இரவுப்பொழுதில் ஒளியூட்டும் முயற்சியை முதன் முதலில் செயற்படுத்தி எமது பிரதேச சபை

















உறுப்பினர் திருமதி.சா. யசோதினி அவர்கள் பதினொரு மின்குமிழ்கள் பொருத்தியிருந்தார். . இன்னும் 25 மின்குமிழ்கள் அவசியமாக பொருத்த வேண்டும் என நாம் கேட்டிருந்தோம் .
அதற்கமைய அவர் எமது புலம்பெயர் சொந்தங்களுடன் தொடர்பு கொண்டு 25மின்விளக்குகளை (35Mw ) பெற்று நேற்றைய தினம் ஊரதீவு சங்குமால் வீதி , பெத்தப்பர் வீதி என்பவற்றுக்கு பொருத்தி இருந்தார். மிக குறுகிய காலத்தில் எமது கிராமத்தை ஒளிபெற செய்த சகோதரிக்கு எமது பாராட்டுக்கள் .
எமது நிலையத்தின் வளர்ச்சியில் முழுமனதாக பங்களித்து வரும் திரு. சி. சந்திரபாலன்அவர்கள் தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு இலட்சம் ரூபா நிதி பங்களிப்பினை இதற்காக வழங்கியுள்ளார் . அந்த உறவுகளுக்கும் எம் கிராம மக்கள் சார்பில் நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்து கொள்கின்ளோம்.