பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2018

யாழில் உடற்பயிற்சி நிலையம் மீது ஆவா குழு தாக்குதல்

யாழ்ப்பாணம்- சுன்னாகம் பிரதேசத்திலுள்ள உடற்பயிற்சி மத்திய நிலையத்தின் மீது நேற்று மாலை தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினரான துவாகரன் என்பரைத் தேடியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த உடற்பயிற்சி மத்திய நிலையத்துக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 ​பேர் கொண்ட குழுவினர் பிரதேச சபை உறுப்பினரான துவாகரனைத் தேடி இங்கு வந்துள்ளதுடன் அவர் அங்கு இல்லாத காரணத்தால் உடற்பயிற்சி மத்திய நிலையத்தின் பொருட்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.

குறித்த உடற்பயிற்சி மத்திய நிலையம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் தனது சுய விருப்பின் பேரில் குறித்த இடத்தை பொலிஸாருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதன் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதால் இந்த இடத்தை பொலிஸாருக்கு வழங்கும் நடவடிக்கையை துவாகரனே முன்னெடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இதற்கு எதிராகவே ஆவா குழுவினர் இந்தத் தாக்குதல் நடவடிக்​கையை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.