பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2018

வெள்ளத்தில் மூழ்கியது கண்டாவளை பிரதேச செயலகம்

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலகம் தொடர்ந்தும் வெள்ளத்தில்; மூழ்கியுள்ளதால் ஆவணங்;கள் மற்;றும் அலுவலகப் பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், தொடர்ந்தும் அலுவலகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.



கிளிநொச்சி மாவட்டத்தின் நேற்று முன்தினம் பெய்த மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், இரணைமடுக்குளத்தினுடைய வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் கனகராயன்ஆற்றுப்படுக்கை அண்டிய கிராமங்கள் தொர்ந்தும்நீரில் மூழ்கியுள்ளன.



இந்தநிலையில் நேற்று பிற்பகல 1.00 மணியளவில் கண்டாவளைப்பிரதேச செயலகத்திற்குள் வெள்ளநீர் புகுந்து கொண்டதால் அங்கிருந்த உத்தியோகத்தர்கள் மற்றும் ஒரு சில ஆவணங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டன.



இந்நிலையில் இன்றும் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பிரதேச செயலகத்திற்குள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதும் தற்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் முயற்;சியினால்அலுவலகத்திற்குள் சென்;று பொருட்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளனர்.