பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜன., 2019

ஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் – 21 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் – 21 பேர் உயிரிழப்பு!ஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் காரணமாக இதுவரையில் 21 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, ஒஸ்ரியா உள்ளிட்ட பல நாடுகளில் கடுமையான பனிப்பொழி ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. வீதியோரங்களில் குவிந்து கிடக்கும் பனிக்கட்டிகளால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஐந்து மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஒஸ்ரியாவில் பனிச்சரிவு அபாயம் குறித்த எச்சரிக்கை உயரிய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு, கடந்த சில நாட்களிலேயே, ஒரு மாதத்திற்கான சராசரிப் பனிப்பொழிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்ஸர்லாந்தில் அதிக பனிபொழிவு காரணமாக விடுதி ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கடும் பனி பொழிவு காரணமாக Frankfurt விமான நிலையத்தில் 120 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.